தெய்வத்தின் குரல்
வாயில்லா ஜீவன் என்று சொல்லப்படுகிற வர்க்கத்தைச் சேர்ந்ததே பசு, அப்படியிருந்தாலும் அது ‘அம்மா’ என்று அடிவயிற்றிலிருந்து வாய்விட்டுக் குரல் கொடுக்கிறது.
‘அம்மா’ என்று சொல்கிற அந்தப் பசுவே நமக்கெல்லாம் அம்மாவாக இருக்கிறது. அம்மாவின் முதல் லக்ஷணம் என்ன? பால் கொடுப்பதுதான். நாம் குழந்தையாயிருந்த போது நம்மைப் பெற்றெடுத்த தாயார் நமக்குப் பாலூட்டி உயிரூட்டினாள். அந்தக் குழந்தைப் பிராயத்திலேயே பசுவும் நமக்குப் பால் கொடுத்து ப்ராண ரக்ஷை தந்தது. பெற்ற தாய் பால் கொடுப்பது நம்முடைய குழந்தைப் பருவத்தோடு முடிந்துவிட்டது
ஆனால் நமக்கு வயதான பின்னரும் பசு தரும் பாலும், அதிலிருந்து பெறப்படுகிற தயிர், மோர், நெய் ஆகியனவும் நம் ஆஹாரத்தில் தொடர்ந்து இடம் பெறுகின்றன. ரொம்பவும் வயஸான தசையிலும், மற்ற ஆகாரங்கள் குறைந்து அல்லது நின்றே போன நிலையிலும் ஒரு மனிதருடைய உடலில் உயிரை நிறுத்திக் கொடுக்கும் உணவாகப் பசு தருகிற பாலே இருக்கிறது. நம்முடைய ஆயுஸின் ஆரம்பத்தில் ஒரு குறுகிய காலகட்டத்தில் மாத்திரம் நம்மைப் பெற்றெடுத்த தாய் பால் தருகிறாளென்றால் பசுவோ நம்முடைய ஆயுள்காலம் பூராவும் பால் தருகிறது. அதனால்தான் உறவுகளிலேயே பரமோத்தமமான தாயுறவைப் பசுவுக்குத் தந்து ‘கோமாதா’ என்றே சொல்வது..
தெய்வமாகப் பூஜை பண்ணுவது இருக்கட்டும். அது சிலர் தான் பண்ண முடியும் ஆனால் எவரானாலும் பண்ண வேண்டிய கடமையாக ஒன்று இருக்கிறது. கோவுக்கு ஆஹாரம் போடுவது தான் அது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஒரு பசுவுக்குக் கைப்பிடி அளவு புல்லாவது கொடுக்கவேண்டும். கோ க்ராஸம் என்று இதை சாஸ்த்திரத்தில் சொல்லியிருக்கிறது. க்ராஸம் என்றால் ஒரு வாய் ஆஹாரம். கோ க்ராஸம் என்பதை வைத்துத்தான் புல்லுக்கு இங்கிலீஷில் grass என்ற பெயர் வந்திருக்கிறது. திருமூலர் திருமந்திரத்தில் ப்ரதி தினமும் ஜீவர்கள் செய்யவேண்டிய கடமைகளில், ஈச்வரனுக்கு ஒரு பச்சிலை, அதாவது வில்வ பத்ரமேனும் அர்ச்சிப்பது, ஒரு கைப்பிடியாவது ஆஹாரம் பிச்சை போடுவது ஆகிய இரண்டுக்கும் நடுவில் கோக்ராஸம் கொடுப்பதையும் சொல்லியிருக்கிறார்.
யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை யாவர்க்குமாம் பசுவுக்கொடு வாயுறை, யாவர்க்குமாம் உர்ணும்போதொரு கைப்பிடி காயர்ககுணம் பிறர்க்கு இன்னுணதானே
மாற்றாரே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் நீங்காத செல்வம் என நம் கோதை பிறாட்டியார் கூறியது போல, பசுக்கள் தான் நன்முடைய செல்வம், இதயே எாம வேதமும் விஸ்வரூபாஹாவு- முட்பத்துமுக்கோடி தேவதைகளும் பசு மாட்டில் வசிக்கிறார்கள் என்று நிர்ணயம் செய்கிறது. இவ்வளவு பெருமை வாய்ந்த கோமாதாவினை போற்றி பேணி பாதுகாப்பது நம் கடமை ஆகும். நமது மாதிரிமங்கலம் ஸ்ரீலக்ஷ்மிநாராயண பெருமாள் ஆலய திருப்பணியின் ஓர் அங்கமாக ஸ்ரீ ப்ரேமிக ப்ருந்தாவனம்-கோசாலை சென்னை மாநகரத்திலும், மாதிரிமங்கலம் க்ஷேத்திரத்திலும் வெகு விமர்ணையாக அமைந்துள்ளது. கோ தாளம், கோ பூஜை செய்ய விரும்பும் அன்பர்கள் அனைவரும் இந்த பொன்னான வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு பேரன்போடு
பசுவுக்கு நாம் அகத்திக் கீரை தருவதால், முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். கொலை, களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி தோஷங்கள் விலகிவிடும். நீண்ட நாட்களாக திதி, கர்மா செய்யாமல் இருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்கு தருவதால் நீங்கும். பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும்.
பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும்.
பசுவை பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜித்த புண்ணியம் உண்டாகும்.
பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும் (கோக்ராஸம்), பசுவின் கழுத்து பகுதியில் சொரிந்து கொடுத்தாலும் (கோகண்டுயனம் ) கொடிய பாவங்கள் விலகும்.
பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் ( லக்னம் ) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான காலமாகும்.
பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது 8 வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால் பட்ட தூசியைதான் மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.” மா” என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்கலத்தை தருகிறது.பசு வசிக்கும் இடத்தில், அதன் அருகில் அமர்ந்து சொல்லும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ 100 மடங்கு பலனைத் தரும்.
மனிதன் கண்களுக்கு புலப்படாத மரத்யு, எமன் எமதூதர்கள் பசுவின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள்.
ஒருவர் இறந்த பின் பூலோகத்திற்கு அழைத்து செல்லப்படும் ஜீவன் அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியை (மலம், சலம், சளி, சுடு நீர் ஓடும் நதி ) கடக்க இயலாமல் தவிக்கிறது. பசு தானம் செய்பவர்களுக்கு இத்துன்பம் இல்லை. அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்றி அதன் வாலைப் பிடித்துக்கொண்டு வைதரணிய நதியை கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.
உலகத்தில் விஞ்ஞானத்தால் எத்தனை பாதிப்பு நிகழ்ந்தாலும், பசுக்கள் வசிக்கும் இடத்தில் மட்டும் எவ்வித பாதிப்பும் இருக்காது.
கோமாதாவை காப்போம், நேசிப்போம், பூஜிப்போம்…
Sri Premika Brindhavan Gowshala’s Call to Action
As the revered Mahaswamigal of Kanchi profoundly remarked, the significance of Gowseva extends beyond mere charitable acts; it is a sacred responsibility that unites individuals under the nurturing embrace of “Gow-Maatha”. At Sri Premika Brindhavanam Gowshala, we embody this ethos by providing a haven for cows, recognizing their divine essence and the imperative need for their protection.
Unifying in Service to “Gow-Maatha”
Mahaswamigal’s words resonate deeply within us. Our commitment transcends mere monetary aid; we beckon all, irrespective of financial or physical capacity, to join hands and hearts in service to our beloved cows. Embracing the timeless wisdom that unifies religions in compassion for all living beings, we invite everyone to participate in the divine act of Gow-seva. This will ensure total involvement and instead of bifurcation as donor and laborer class they will all come under the aegis of children of “Gow-Maatha” as a member of the same family.
Protection and Well-being of Cows
Our gow-shala meticulously maintain their well-being through a blend of traditional practices and modern infrastructure. Special attention is given to their nutrition, with a dedicated region for cultivating high-quality grass, tailored to enhance their health and milk yield.
Holistic Infrastructure and Ethical Practices
The infrastructure of Sri Premika Brindhavanam Gow-shala is designed with meticulous care to prioritize the comfort and hygiene of our beloved cows. Sophisticated amenities such as functional fans and water sprinklers ensure an optimal environment, even during adverse weather conditions. Our commitment to ethical practices is unwavering; milking occurs only after calves have nursed, with the milk donated to Veda Paatashaalas and Dharma Sthapanas, ensuring it serves noble causes rather than commercial interests.
Focus on Sustainability and Compassionate Care
At Sri Premika Brindhavanam Gow-shala, we demonstrate reverence to the cows, not just as providers of milk but as sacred beings embodying the virtues of compassion and sustainability. Even aged cows receive the same dedicated care as those yielding milk, aligning with our ethos of Gow-Samrakshanam as a service rather than for profit.
Sri Premika Brindhavanam Gow-shala stands as a beacon of reverence and service, preserving the sacred bond between humanity and Gow-Matha, fostering Dharma, and enriching the community. Cultivating the continuation of these noble activities requires consistent and unwavering support from individuals.
Your contribution, whether through donations, volunteerism, or spreading awareness, is pivotal in ensuring the sustenance and growth of these endeavors, allowing us to serve our communities and uphold our shared values effectively. Join us in our noble endeavor to protect, nurture, and uphold the sanctity of Indian cows.
இத்தகைய தர்மத்தில் தாங்கள் ஈடு பட்டு தங்களுடைய பிறந்த நாள், திருமண நாள், பெரியோர்களின் நினைவுநாள் போன்றதான முக்கிய நாட்களில் கோசேவா கைங்கர்யத்தில் ஈடுபட இருகரம் கூப்பி அன்புடன் அழைக்கின்றோம்.
ஒரு நாள் கோசேவைக்கு ரூ.1,000/- (வைக்கோல், தீவனம் & பராமரிப்பு) ஆகின்றது. அன்றைய தினம் தங்கள் விருப்பத்திற்கு கோ-பூஜை செய்து ப்ரசாதம் அனுப்பப்படும்.
Sri Lakshmi Narayana Perumal Charitable Trust is a non-profitable organisaton with a unique goal, volunteered by persons privately.
Copyrights © 2025 Thapas. Website Design Company in Chennai : 360degreeinfo